ARTICLE AD BOX
புன்னகை இளவரசி என அழைக்கப்படும் நடிகை சினேகா, இத்திரைப்படத்தின் முதல் பாதியில் மருத்துவராக கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார்!
லவ் டுடே திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த நடிகை இவானா. இத்திரைப்படத்தின் இறுதி காட்சியில் ஒரு சிறப்பு பாத்திரத்தில் நடித்திருந்தார்!
டிராகன் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து; இத்திரைப்படத்தில் நடிகர் நாயகனுக்கு போலி சான்றிதழ் பெற உதவி செய்யும் நபராக ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பார்!
பிரபல சமூக ஊடக பிரபலம் மற்றும் TEDx பேச்சாளர் அன்வேஷி ஜெயின், இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்துவின் காதலியாக ஒரே ஒரு காட்சியில் (சிறப்பு தோற்றத்தில்) நடித்திருந்தார்!
மாஸ்டர் திரைப்படத்தின் "Master the Blaster" பாடல் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மற்றும் பாடகர் Bjorn Surrao; இத்திரைப்படத்தில் நாயகனின் நேர்காணலுக்கு உதவி செய்யும் நபராக சிறு காட்சியில் நடித்திருப்பார்!
பிரபல நடண இயக்குனர் சாண்டி மாஸ்டர், இத்திரைப்படத்தின் "மாட்டிகினாறு ஒருத்தர்" எனும் பாடலில் இடம்பெற்று, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்!
Identity (2025), Suzhal - The Vortex (2022) உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கோபிகா ரமேஷ், இத்திரைப்படத்தில் நாயகன் டிராகனின் பள்ளி கால காதலியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்!
இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், இதனை பொய்யாக்கியுள்ளது படக்குழு. அதேநேரம், நடிகர் சிம்பு இத்திரைப்படத்தின் ‘ஏன்டி விட்டு போன’ எனும் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
Thanks For Reading!








English (US) ·