ARTICLE AD BOX
Kaithi 2: லோகேஷ், கார்த்தி கூட்டணியில் வெளிவந்த கைதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் படமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக விக்ரம் படம் வந்ததும் LCU என கனெக்ட் செய்தார் லோகேஷ்.

அதைத்தொடர்ந்து லியோ வெளிவந்தது. இந்த படங்கள் மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தது.

அதை அடுத்து கைதி 2 வரும் என லோகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் இடையில் சன் பிக்சர்ஸ் ரஜினி கூட்டணியில் கூலி படத்தில் அவர் பிஸியாக இருக்கிறார்.
கார்த்தி வெளியிட்ட போட்டோ
இன்னும் சில தினங்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கிறது. அதை அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கார்த்தி லோகேஷை சந்தித்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இன்றி டில்லி ரிட்டன்ஸ் இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கைதி 2 இந்த வருடம் தொடங்கும் என அவர் சொல்லியிருக்கிறார். இது போதாதா ரசிகர்கள் இப்போது இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.
கூலி, சர்தார் 2 படங்கள் ரிலீஸ் ஆனதும் இது தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 months ago
9






English (US) ·