தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு: ஒரு நாள் வாடகை ரூ.75 ஆயிரம்

9 months ago 8
ARTICLE AD BOX

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் இருந்து, மாறி தற்போது எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். பனம்பிள்ளி நகரில் உள்ள மம்மூட்டியின் வித்தியாசமான பங்களாவின் முன் நின்று ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் அந்த பங்களா, ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

விகேஷன் எக்பிரீயன்ஸ் என்கிற நிறுவனம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்தப் பங்களாவில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை ரூ.75 ஆயிரம். செல்போன் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யலாம். இந்த வீட்டில் தங்கும்போது எப்படியாவது மம்மூட்டியைப் பார்த்து விட மாட்டோமா என்கிற எண்ணத்தில் ரசிகர்கள் பலர் முன்பதிவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article