தமிழில் படம் இயக்கியுள்ள நகைச்சுவை நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

8 months ago 8
ARTICLE AD BOX
திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள பல பிரபலங்கள், இயக்குனர் அவதாரத்தையும் கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில், திரைப்படங்கள் இயக்கியுள்ள காமெடி நட்சத்திரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்
Image 1
கோலிவுட் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்து ரசித்த ரவி மரியா, இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2002ல் ஜீவா நடித்த ஆசை ஆசையாய் திரைப்படத்தையும், 2010ல் நட்டியை நடித்த மிளகா படத்தையும் இயக்கியுள்ளார்
Image 2
பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் வசனம் மூலம் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்த சிங்கம் புலி, ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 2002ல் அஜித் நடித்த ரெட் மற்றும் 2005ல் சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியுள்ளார்
Image 3
தமிழ் சினிமாவில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நாகேஷ். இவர் நகைச்சுவை நடிகர், குணச்சித்தர நடிகர், வில்லன் என பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தனது மகனை வைத்து 1985ல் பார்த்த ஞாபகம் இல்லையோ எனும் திரைப்படத்தை மட்டும் இயக்கியுள்ளார்
Image 4
ஸ்ரீநாத், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். வேட்டைக்காரன், குட்டி போன்ற படங்களில் நகைச்சுவை ரோலில் நடித்துள்ளார். இவர் மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மட்டுமின்றி முத்திரை, லெக் பீஸ் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்
Image 5
கோலிவுட்டில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த மனோபாலா, மிகப்பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களும் இயக்கியுள்ளார். ரஜினியின் ஊர்க்காவலன்,விஜயகாந்தின் 'என் புருஷ்ன் தான் எனக்கு மட்டும் தான்' மட்டுமின்றி இந்தி படத்தையும் இயக்கியுள்ளார்
Image 6
பரத்தின் காதல் திரைப்படம் மூலம் பிரபலமான காதல் சுகுமார், கோலிவுட்டில் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதேநேரம், திருட்டு விசிடி மற்றும் சும்மாவே ஆடுவோம் ஆகிய படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
Image 7
90ஸ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்தர ரோலிலும் நடித்தவர் சின்னி ஜெயந்த். இவர் உனக்காக மட்டும், காணல் நீர், நீயே என் காதலி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'உனக்காக மட்டும்' படத்தில் அவரது மகன் ஹீரோவாக நடித்திருந்தார்
Image 8
சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணசித்தர கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் மனிதில் இடம்பிடித்தவர் தம்பி ராமையா. இவர் 2000ம் ஆண்டு மனுநீதி, 2008ல் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் மற்றும் 2018ல் மணியார் குடும்பம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்
Image 9
Thanks For Reading!
Read Entire Article