ARTICLE AD BOX

ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அபு பக்கர் இசையமைத்துள்ளார்.
இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இயக்குநர் ரமேஷ் இலங்காமணி கூறும்போது, “ இது காதல் ஃபேன்டஸி படம். காதல் தோல்வி காரணமாக நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரது முகநூல் மெஸன்ஜரில் ஒரு பெண் தகவல் அனுப்பி அதை தடுக்கிறார். தான் தற்கொலை செய்யப் போவது அவளுக்கு எப்படித் தெரியும்?

2 months ago
4





English (US) ·