ARTICLE AD BOX
யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய தயாரிப்பாளர் ராஜா, ``ஒரு படத்தின் வெளியீடு என்பது ஒரு நடிகருக்கு குழந்தைப் பிறப்பது போல. அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு உண்டு.
ராஜாஇந்தப் படத்தில் நடித்த நடிகர் யோகிபாபு இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை. 7 லட்சம் கொடுத்திருந்தால் வந்திருப்பார். இது எவ்வளவுப் பெரிய கேவலமான விஷயம்.
ஒரு படத்தின் வெளியீட்டுக்கு வரவில்லை என்றால், நீ நடிகனாக இருக்கவே தகுதியற்றவன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும்" என்றார்.
Yogi babu: உண்மைச் சம்பவக் காதல் கதையில் யோகி பாபு; நடிகராகும் இயக்குநர் லெனின் பாரதி
7 months ago
8






English (US) ·