ARTICLE AD BOX
பிரபல பாலிவுட் வில்லன் Jackie Shroff, Good Bad Ugly திரைப்படத்தில் வெறும் 2 காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் பிரபல குற்றவியல் குழுவின் தலைவராக இவர் நடித்துள்ளார்.
90-களின் கனவுக்கன்னி சிம்ரன், Good Bad Ugly திரைப்படத்தில் ‘பிரியா’ எனும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். நடிகர் அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த, வாலி (1999) திரைப்படத்தில், சிம்ரனின் பெயர் பிரியா என்பது குறிப்பிடத்தக்கது!
Good Bad Ugly படத்தின் பல்வேறு இடங்களில் - பெயர் இல்லா - ஜெயில் கைதியாக நடித்திருப்பார் Redin Kingsley.
மலையாள திரையுலகின் மாஸ் நடிகர் Shine Tom Chacko, இத்திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் ‘நாயகனின் வரலாற்றை’ கூறும் கேங்ஸ்டராக சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றிருப்பார்.
பிரபல பின்னணி பாடகி உஷா உதூப், படத்தின் ஆரம்ப காட்சியில் நீதிபதியாக தோன்றியிருப்பார். படத்தில் இவரது பாத்திரம் ஒரு காட்சியில் மட்டுமே இடம் பெறும்.
பிரபல பாலிவுட் வில்லன் ராகுல் தேவ், படத்தின் முதல் சண்டை காட்சியில் ‘சிறை கைதியாக’ நடித்திருப்பார். நடிகர் Redin Kingsley உடன் பயணிக்கும் ஒரு பாத்திரமாக இவரது பாத்திரம் இடம்பெறும்!
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, படத்தின் இரண்டாம் பகுதியில் விமான நிலைய ஊழியராக நடித்திருப்பார். கதையின் நாயகன் AK-வை ஸ்பெயினில் நிற்க வைக்கும் பாத்திரம் இவருடையது!
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்திய சாயாஜி ஷிண்டே, இத்திரைப்படத்தில் சிறைக்காவலராக சிறு பாத்திரத்தில் தோன்றி அசத்தியிருப்பார்!
Thanks For Reading!







English (US) ·