ARTICLE AD BOX
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்த தமிழ் திரைப்படம். கதையின் தேவைக்காக தனது உடல் எடையை குறைத்தும் - அதிகரித்தும் மிரட்டியிருப்பார் நடிகர் ஆர்யா!
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தியாவை திரையில் காட்டிய தமிழ் திரைப்படம் மதராசப்பட்டினம். தனித்துவமான காதல் கதையில், ஆர்யா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் இது!
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, அகோரியாக நடித்த திரைப்படம் நான் கடவுள். வழக்கமான சாக்லேட் நாயகன் பாத்திரத்தில் இருந்து மாறுபட்டு, ஆக்ரோஷமான நாயகனாக நடிகர் ஆர்யா தோன்றியிருப்பார்.
காதல் முறிவுக்கு பின்னர் காத்திருக்கும் ஒரு அழகிய வாழ்க்கை குறித்து ரசிக்கும் வகையில் கூறிய தமிழ் திரைப்படம் ராஜா ராணி. அட்லி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆர்யா!
உள்ளம் கேட்குமே (2005) திரைப்படத்தின் தாமதத்தால், ஆர்யாவுக்கு முதல் திரைப்படமாக அமைந்த திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இத்திரைப்படத்தில் இவர், தனது துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்!
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நயன்தாரா நடிக்க கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது!
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்க கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் மீகாமன். படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் சாந்தமாகவும், தேவைப்படும் இடங்களில் ஆக்ரோஷமாகவும் நடித்திருப்பார் ஆர்யா!
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிக்க கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை - நாடகத் திரைப்படம். ஆர்யா, விஷால் இருவரும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உலக திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்!
Thanks For Reading!







English (US) ·