ARTICLE AD BOX
நடிகர் சசிகுமார் இயக்குனராக அறிமுகமான தமிழ் திரைப்படம். சசி குமார் தானே இயக்கி நடித்த இத்திரைப்படத்தில், ஜெய் நாயகனாக நடிக்க, சசி முக்கிய பாத்திரத்தில் தோன்றி விருதுகள் பல வென்றார்!
இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தி நடிகர் சசிகுமார் தயாரித்து நடித்த தமிழ் திரைப்படம் நாடோடிகள். காதலர்களை சேர்த்து வைக்க உதவும் நண்பர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இத்திரைப்படத்தின் ஒரு வரி கதை!
நடிகர் சசிகுமார் மலையாளத்தில் அறிமுகமான திரைப்படம். நாயகன் பிரத்விராஜுக்கு இணையான பாத்திரத்தில் தோன்றி, தனது எதார்த்தமான நடிப்பால் மலையாள திரையுலகை கவர்ந்த திரைப்படம்!
நட்பு, காதல், துரோகம், பாசம் என உறவின் உணர்வுகளை உவமையாக கூறிய தமிழ் திரைப்படம். குறிப்பாக, நண்பர்களுக்கு இடையே உள்ள உணர்வு பகிர்தலை குறித்து தெளிவாக பேசிய ஒரு படம்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வர லட்சுமி உள்ளிட்டோர் நடிக்க கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் உள்ள சிரமங்களை பற்றி பேசிய ஒரு திரைப்படம்.
வில்லன் கூட்டத்திடம் இருந்து தனது குடும்பத்தை காக்க போராடும் சாமானியன் ஒருவனின் கதையே இந்த நான் மிருகமாய் மாற. திகட்ட திகட்ட வன்முறை காட்சிகளால் நிறைந்த ஒரு படமாக இது அமைகிறது!
இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் கடந்த 2023 வெளியான திரைப்படம் அயோத்தி. படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட திரைப்படம் - கதையின் தேவைக்கான விஷயங்களை சிறப்பாக தனது நடிப்பின் மூலம் அளித்திருப்பார் சசி குமார்!
நந்தன் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குறித்து பேசும் ஒரு அரசியல் திரைப்படம். கதையின் தேவைக்கான விஷயங்களில் கவணம் செலுத்தி, தனது சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் சசிகுமார்!
Thanks For Reading!







English (US) ·