ARTICLE AD BOX
நடிகை ஸ்ருத்திகா, காயத்திரி ஜெயராமன் உள்ளிட்டோருடன் நடிகர் சூர்யா நடிக்க கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஸ்ரீ. இத்திரைப்படத்தில், அடிதடி செய்யும் உள்ளூர் ரவுடியாக நடிகர் சூர்யா நடித்திருப்பார்!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, உள்ளூர் கேங்ஸ்டராக நடித்த திரைப்படம் ஆறு. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட அடக்குமுறை சம்பவங்களில் ஈடுபடும் நாயகனாக நடிகர் சூர்யா இதில் நடித்திருப்பார்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா, கூலிப்படை குழு தலைவனாக நடித்திருக்கும் திரைப்படம் ஆதவன். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று!
இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவான திரைப்படம். ஆந்திராவின் பரிதாலா ரவிந்திரன் மற்றும் மத்தலசெருவு சூரி என்பவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவான திரைப்படம் இதுவாகும்!
இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில், நடிகர் சூர்யா கொலை - கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குழுவின் தலைவராக நடித்திருப்பார். நடிகர் சூர்யாவின் மாஸ் ஆக்ஷன் நடிப்புக்கு இத்திரைப்படம் ஒரு சான்று ஆகும்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, கடைசி 10 நிமிடத்தில் Rolex-ஆக திரையில் தோன்றி, ரசிகர்களை சூர்யா கவர்ந்த திரைப்படம் விக்ரம்.
நடிகர் சூர்யா நடிப்பில் அன்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கண்டுள்ள திரைப்படம் ரெட்ரோ. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா, 80-களின் காலக்கட்டத்தில் வாழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையை பிரதிபலித்துள்ளார்!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் கங்குவா. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் பாத்திரம் ஒன்று, பணத்திற்காக எதையும் செய்யும் கேங்ஸ்டர் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்!
Thanks For Reading!







English (US) ·