நடிகர் ஜீவாவுக்கு இவ்வளவு பெரிய பையனா? அப்பா உயரம் இருக்கும் வைரல் புகைப்படம்

8 months ago 8
ARTICLE AD BOX

என்றும் இளமையாக இருக்கும் ஜீவாவுக்கு இவ்வளவு பெரிய பையனா என ஆச்சரியப்படும் அளவுக்கு நெடுநெடுவென அவரது மகன் ஸ்பார்ஷா என்பவர் வளர்ந்துள்ளார். அவரது புகைப்படம் தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்ற அந்தஸ்துடன் களம் இறங்கியவர் ஜீவா. ஆரம்பத்தில் சில படங்கள் சறுக்கினாலும் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் ஜீவாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது.

அதனைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் ஜீவாவுக்குள் இருந்த நடிகரை தட்டி எழுப்பியது. அதன்பிறகு கமர்சியல் படங்களால் எதிர்பாராத தோல்வியை சந்தித்த ஜீவா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேடி தேடி நடித்து வருகிறார்.

கடைசியாக ஜீவா நடிப்பில் வெளியான திருநாள், ஜிப்ஸி, கொரில்லா போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜீவா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என்பவருடன் சேர்ந்து 83 எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஜீவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். ஜீவா 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் ஸ்பார்ஷா என்ற மகன் இருக்கிறார். பதினோரு வயதிலேயே அப்பாவின் உயரத்தில் பாதி வளர்ந்து விட்டார் என ஆச்சரியமாக பார்க்கிறது கோலிவுட் வட்டாரம்.

jeeva-and-his-son-cinemapettaijeeva-and-his-son-cinemapettai
jiiva-with-sonjiiva-with-son
Read Entire Article