ARTICLE AD BOX
சென்னையில் தற்போது வசித்து வரும் மிர்ச்சி சிவா, கடந்த 1982-ஆம் ஆண்டு திருப்பூர் மவாட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர். பின், சென்னைக்கு குடிபெயர்ந்தார்!
கூட்டு குடும்பத்தில் வளர்ந்த சிவா-விற்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது இல்லை. தனது தொழில் வாழ்க்கையை ரோடியே வழியே தொடங்கியதன் விளைவாக, அங்கு கிடைத்த நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் கால் பதித்தார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாக சிவா, பிரபல FM ரோடியோவில் RJ-வாக பணியாற்றியுள்ளார். அது மட்டும் அல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
வெங்கட் பிரபுவின் Chennai 600028 (2007) திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிவா, முதன் முதலில் வெள்ளித்திரையில் தோன்றியது 12B (2001) படத்தில் தான். இத்திரைபடத்தில் நாயகனின் நண்பனமாக நடித்திருப்பார்.
பெரும்பாலும் நகைச்சுவை சார்ந்த படங்களில் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்த சிவா, 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, கலகலப்பு, தமிழ் படம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை!
நடிப்பில் மட்டும் அல்லாது பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் மிர்ச்சி சிவா. வா (2010) திரைப்படத்தின் சௌதி பாஷா பாடல் மற்றும் சொன்னா புரியாது (2013) திரைப்படத்தின் ரோசா ஹே பாடல்களை எழுதியது (பாடியதும்) இவர்தான்!
நடிப்பு, பாடல் - பாடகர் எனும் பாத்திரங்களை தவிர்த்து; கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ஆடாம ஜெயிச்சோமடா (2014) எனும் தமிழ் திரைப்படத்திற்கு வசனங்கையும் சிவா எழுதியுள்ளார்!
திரைத்துறையில் பிஸியாக இருந்த அதேநேரம், காதல் செய்வதிலும் பிஸியாக இருந்த சிவா, கடந்த 2012-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி பிரியா, தேசிய அளவில் பேட்மிண்டன் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!
Thanks For Reading!







English (US) ·