ARTICLE AD BOX
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்த சிம்ரம், உண்மையில் வட இந்தியாவை சேர்ந்தவர். ஏப்ரல் 4, 1976-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் (பஞ்சாபி தம்பதியருக்கு மகளாய்) பிறந்தவர்!
கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரம், முதன் முதலில் அறிமுகமானது இந்தியில் தான். Sanam Harjai (1995) எனும் இந்தி மொழி படமே இவரது முதல் வெள்ளித்திரை படம் ஆகும்!
பாலிவுட்டில் பிஸியாக நடித்து வந்த நடிகை சிம்ரனுக்கு, தமிழில் முதல் படமாக அமைந்தது VIP (1997). எனினும், நடிகர் சிவாஜி மற்றும் விஜயுடன் இவர் நடித்த Once More (1997) திரைப்படமே, கோலிவுட்டில் இவருக்கு ஒரு நிரந்தர இடத்தை பெற்று தந்தது!
இந்தி, தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் சிம்ரன் நடித்துள்ளார். இதன் விளைவாக தாய் மொழியான பஞ்சாபி தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வந்த நடிகை சிம்ரன், திரைப்படங்களுக்கு முன்னதாக (1995-ஆம் ஆண்டு) தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். பின் மீண்டும் 2008-ஆம் ஆண்டு சிம்ரன் திரை நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்கு திரும்பினார்!
நடிப்பு மட்டும் அல்லாது, நடனத்தை முறையாக கற்றவர் நடிகை சிம்ரன். சால்சா மற்றும் பரதநாட்டியத்தை முறையாக கற்ற இவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார்!
நடிப்பு, நடனம் தவிர்த்து உடற்பயிற்சியின் மீதும் தீராத காதல் கொண்டவர் நடிகை சிம்ரன். அந்த வகையில் தினசரி உடற்பயிற்சி, யோகா செய்வதை தனது வழக்கமாக வைத்துள்ளார்!
திரைத்துரையில் தான் பிஸியாக இருந்த காலத்தில், தனது பள்ளி கால தோழர் தீபக் பக்கா-வை காதலித்து திருமணம் செய்தார் சிம்ரன். தற்போது இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது!
Thanks For Reading!







English (US) ·