நடிகை பெருமாயி காலமானார்.. `விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்'

7 months ago 8
ARTICLE AD BOX

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி.

73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார்.

பெருமாயி பெருமாயி

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’, விஜய்யின் ‘வில்லு’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக  நடிகர் பசுபதியின் ‘தண்டட்டி’ படத்தில் நடித்த இவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார்.

அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த சிலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article