நல்ல கதைக்கு பைனான்ஸ் கிடைப்பதில்லை: எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்

2 months ago 4
ARTICLE AD BOX

பள்ளிப் பருவ மாணவர்​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்​டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி கதா​பாத்​திரத்​தி​லும் அப்​துல்லா கதா​பாத்​திரத்​தில் அர்​ஜுன், ராம் கதா​பாத்​திரத்​தில் அஜய் அர்​னால்டு ஆகியோ​ரும் நடித்​துள்ளனர். த.ஜெய​வேல் இயக்​கி​யுள்​ளார். எல்​.கே.​விஜய் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்​தன் இசை அமைத்​துள்​ளார். அன்னை வேளாங்​கண்ணி ஸ்டூடியோஸ் சார்​பில் கிளமண்ட் சுரேஷ் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தின் இசை மற்​றும் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னையில் நடந்தது.

படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்.ஆர். பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா கலந்து கொண்டனர். இசைத்தட்டை வெளியிட்டு எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது, “இப்போதைய ட்ரென்ட் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்​லை என்​றால்​ புதியவர்​களை வைத்​து படம்​ பண்​ண வேண்​டும்​. இதற்​கு நடு​வில்​ உள்​ளவர்​களை வைத்​து படம்​ பண்​ணி​னால்​ தயாரிப்​பாளர்​கள்​ காணா​மல்​ போய்​விடு​வார்​கள்​. சூப்​பர்​ ஸ்டார்​களை வைத்​து படம்​ எடுத்​தால்​ அதற்​கு பைனான்​ஸ்​ கொடுப்​ப​தற்​கு ஆட்​கள்​ இருக்​கிறார்​கள்​. நல்​ல கதையை வைத்​து படம்​ எடுப்​ப​தற்​கு பைனான்​ஸ்​ பண்​ண ஆட்​கள்​ தயாராக இல்லை.

Read Entire Article