பரஸ்பர விவாகரத்து கோரி வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் என்ற பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 12 ஆண்டு கால திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Read Entire Article