ARTICLE AD BOX
பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கொங்கணி பேசும் தம்பதிக்கு, 1986ல் டென்மார்க்கில் பிறந்தார். பிறகு, கர்நாடகாவில் குடிபெயர்ந்தனர்
இந்தியில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, கர்நாடாக மாநிலத்தை சேர்ந்தவர் ஆகும். இவர் 1975ல் ஜூன் 6ம் தேதி மங்களூருவில் துளு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார்
பாலிவுட்டை கலக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், கர்நாடகா மாநிலம் மங்களூருவில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். 1977ல் Aur Pyaar Ho Gaya படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்
பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தபு, ஹைதராபாத்தில் 1971ம் ஆண்டு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார்.
பாலிவுட் சினிமாவில் அளித்த பங்களிப்பிற்காக பத்ம ஸ்ரீ மட்டுமின்றி ஏராளமான விருதுகளை வென்றவர் நடிகை ஹேமா மாலினி. இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1948ல் அக்.16ம் தேதி பிறந்தார்
பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வரும் தியா மிர்சா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1981 டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். Rehnaa Hai Terre Dil Mein எனும் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்
1980களில் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை ரதி அக்னிகோத்ரி. இவர் 16 வயதிலேயே புதிய வார்ப்புகள் படம் மூலம் ஸ்டார் ஆன நிலையில், பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரேகா, நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆகும். சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், 1970ல் sawan bhadon படம் மூலம் ஓவர்நைட்டில் ஸ்டார் ஆனார். அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது.
Thanks For Reading!







English (US) ·