பிக்பாஸ் நாயகி 'ரைசா வில்சன்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

8 months ago 8
ARTICLE AD BOX
ரைசா வில்சன், ஊட்டியில் ஏப்ரல் 9ம் தேதி 1989ம் ஆண்டு பிறந்தார். ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், பெங்களூருக்கு கல்லூரி படிப்பிற்காக சென்றார். அச்சமயத்தில், அங்குள்ள கிளப் ஒன்றில் PR, sales மற்றும் marketing manager ஆக பணியாற்றியுள்ளார்
Image 1
மாடலிங்கில் ஆர்வம் வந்த ரைசா, மிஸ் இந்திய சவுத் 2011 போட்டியில் பங்கேற்று பட்டத்தை தட்டிச்சென்றார். இத்துடன், Femina Miss Beautiful Smile விருதையும் வென்றார்
Image 2
2017ல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது சிறிய ரோலாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்
Image 3
பிறகு, பிக்பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆரம்பத்தில் இருந்து அட்டகாசமாக விளையாடிய ரைசா, 61வது நாளில் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்
Image 4
பிக்பாஸுக்கு பிறகு ரைசாவுக்கு கோலிவுட்டில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2018ல் வெளியான ஹரிஷ் கல்யாணின் Pyaar Prema Kaadhal படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது
Image 5
பிறகு, அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தை பாலா இயக்கவிருந்தார். அதில் முக்கிய ரோலுக்கு ரைசா கமிட் ஆகியிருந்தார். ஆனால், பாலா மற்றும் ரைசா பங்களிப்பு இல்லாமலே ஆதித்யா வர்மா பெயரில் அப்படத்தை Gireesaaya என்பவர் இயக்கினார்
Image 6
Pyaar Prema Kaadhal படத்திற்காக எடிசன் விருது, சைமா விருது, பிலிம்பேர் விருதுகள் சவுத் போன்றவற்றை ரைசா வில்சன் பெற்றுள்ளார். அவரது நடிப்பை பாராட்டி சிறந்த அறிமுக நடிகை என்று கவுரவித்தனர்
Image 7
ரைசாவுக்கு பாக்ஸிங் மீது அதிக ஆர்வம் உள்ளது. அவர் தீவிரமான குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்
Image 8
திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், ஹாலிவுட் நடிகைகளை டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். அவர் சுற்றுலாவில் எடுக்கும் படங்களை ரசிகர்களுடன் பகிர செய்வார். அவரது இன்ஸ்டா கணக்கை 15 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்
Image 9
Thanks For Reading!
Read Entire Article