ARTICLE AD BOX
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த பாவனி ரெட்டி, கல்லூரி படிப்பை முடித்த கையோடு மாடலிங்கில் கால் பதிக்க விரும்பினார். 21 வயதிலே மாடல் அழகியாக ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்
2012ல் பாலிவுட்டில் வெளியான 'லாகின்' என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார் பாவனி. அதே ஆண்டில், தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள், ட்ரீம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஆனால், பெரியளவில் பட வாய்ப்புகள் வராததால் சீரியலில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். 2015ல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டை வால் குருவி சீரியலில் கதாநாயகியாக நடித்தார்
பாவனியின் பெயர் சின்னத்திரையில் பிரபலமடைய அடுத்தடுத்து பல சீரியல்களில் கமிட் ஆக தொடங்கினார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் - தெலுங்கு சீரியலிலும் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
2021ல் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். அவர் அட்டகாசமாக விளையாடி மக்களின் ஆதரவை பெற, 2வது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஷோவில் பாதியில் என்ட்ரி கொடுத்த அமீரை தான் தற்போது திருமணம் செய்துள்ளார்
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் பாவனி அதிக கவனம் செலுத்துகிறார். ஜிம்முக்கு தவறாமல் சென்று உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார். அந்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களையும் ஊக்குவித்து வந்தார்.
2016ல் தெலுங்கு நடிகர் பிரவீன் குமாரை பாவனி மணந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஒரே ஆண்டில் பிரவீன் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பல ஆண்டுகளாக மீளா சோகத்தில் இருந்த பாவனிக்கு பிக்பாஸில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக அமீர் திகழ்கிறார்
பாவனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர். அவர் துபாய் உட்பட ஏராளமான இடங்களுக்கு சுற்றுலா சென்ற படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை அள்ளியுள்ளார்.
Thanks For Reading!







English (US) ·