பிரபாஸின் ‘த ராஜா சாப்’ ட்ரெய்லர் எப்படி? - காதலும், திகிலும்!

2 months ago 4
ARTICLE AD BOX

பிரபாஸ் நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - மூன்றரை நிமிடங்களுக்கு மேல் ஓடியும் கதை இன்னதுதான் என்பதை யூகிக்கவே முடியாதபடி ஒரு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. காமெடி திகில் படங்கள் பெரியளவில் வெளியாகாத ஒரு காலகட்டத்தில் துணிந்து இப்படி ஒரு கதையை பிரபாஸ் தேர்வு செய்திருக்கிறார்.

Read Entire Article