ARTICLE AD BOX
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதில் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்
வெற்றி மாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் டீஸர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது அனுஷ்கா லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படமாகும். இப்படம் மூலம் விக்ரம் பிரபு, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா வெளியீடாக திரைக்கு வந்துள்ளது
விஜய் டிவி புகழ் பாலா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். பாலாவுக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். அர்ச்சனா, நிகிலா சங்கர் என பலர் நடித்துள்ளார்
ஹாரர் பிரியர்களுக்காக 'த கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது
டைகர் ஷெராஃப் நடித்துள்ள பாஹி 4 திரைப்படமும் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான 3 பாகங்களுக்கு இந்தி ரசிகர்கள் இடையே வரவேற்பு கிடைத்தது
தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனரான விவேக் அக்னிஹோத்ராவின் அடுத்த படைப்பான தி பெங்கால் பைல்ஸ் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த படங்கள் மட்டுமின்றி கடந்த வாரம் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படமும் தியேட்டரில் காணலாம். 6 நாளிலேயே உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்தது
Thanks For Reading!








English (US) ·