ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் திறமையான நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரண செய்தி, ரசிகர்களையும் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெற்றிமாறனின் “வடசென்னை யுனிவர்ஸ்”ல் அவர் நடித்த கதாப்பாத்திரம், தொடர்ச்சியாக அடுத்த பாகத்திலும் முக்கிய பங்கை வகிக்க இருந்தது.
ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு, அந்த கதாபாத்திரம் எப்படி கையாளப்படும் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் எழுந்திருந்தது.
கவின் களமிறங்குகிறார் – டேனியல் பாலாஜி கதாபாத்திரத்தை மாற்றுகிறார்!
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, வெற்றிமாறன் “வடசென்னை 2”யில் டேனியல் பாலாஜி நடிக்க இருந்த கதாபாத்திரத்தை கவின் (Kavin) நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கவின் இதுவரை காதல், குடும்பம் சார்ந்த கதைகளில் அதிகம் நடித்திருந்தாலும், இந்த முறை அவர் மிகவும் ரா (Raw) & கிரிட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் உலகின் உண்மைத்தன்மையும், கெவின் நடிப்புத் திறனும் இணைந்தால்,
அது தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய முகத்தை கொடுக்கும்.
STR “அரசன்” – அதிலும் கவின் இணைந்தாரா?
இதே நேரத்தில், கவின் சிலம்பரசன் (STR) நடிப்பில் உருவாகும் “அரசன்” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
வெற்றிமாறன் எழுதிய திரைக்கதை, வடசென்னை யுனிவர்ஸைச் சார்ந்த கதை என்பதால், இரண்டு படங்களிலும் கவின் முக்கியமான இணைப்பாக வருவார் என கூறப்படுகிறது.
vadachennai-arasanசிம்பு நடிக்கும் “அரசன்” படத்தில் அவர் வடசென்னை யுனிவர்ஸை இணைக்கும் கதாபாத்திரம் எனவும், ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். இது STR – கவின்கூட்டணிக்கான ரசிகர் எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது.
வெற்றிமாறன் யுனிவர்ஸில் தொடரும் வாழ்க்கை & மரணத்தின் மாயை
வெற்றிமாறன் சினிமாக்கள் எப்போதும் ரியலிஸ்டிக் டார்க் நரேஷன்-க்கு பெயர் பெற்றவை. வடசென்னை யுனிவர்ஸில் ஒரு கதாபாத்திரம் மறைந்தாலும், அதன் நிழல் அடுத்த படங்களிலும் வாழும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும். அதனால் டேனியல் பாலாஜியின் கதாபாத்திரம் முழுமையாக நீக்கப்படாமல், கவின் வழியாக மறுபிறவி எடுத்தது போல கதை அமைக்கப்படும் என கூறப்படுகிறது.
கவின் – மாஸ் யுனிவர்ஸில் புதிய முகம்!
கவின் இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் பிரபலமானவர். ஆனால், வெற்றிமாறனின் அரசியல், கங்க்ஸ்டர் நிறைந்த யுனிவர்ஸில் நடிப்பது அவருக்கு ஒரு பெரும் “கேரியர் டர்னிங் பாயின்ட்” ஆக இருக்கும்.
அவர் STR உடன் ஒரே ஃப்ரேமில் பகிரும் தருணம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அதிர்வை கொடுக்கப்போகிறது. வெற்றிமாறன் யுனிவர்ஸ் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது பாஸ் – இந்த முறை கவின் தான் வடசென்னையின் புதிய முகம்!

2 months ago
4






English (US) ·