மலையாள சினிமாவில் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ சாதனை

2 months ago 4
ARTICLE AD BOX

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். டொம்னிக் அருண் இயக்கிய இந்தப் படம், மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில், ஆக் ஷன் காட்சிகளும் பிளாஷ்பேக்கில் வரும் தொன்மக் கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மலையாளத்தில் மட்டும், 39 நாட்களில் ரூ.119 கோடியை வசூலித்துள்ளது. இதனால், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படைத்துள்ளது. இதற்கு முன் எந்த மலையாளப் படமும் இவ்வளவு கோடி வசூலை எட்டியதில்லை. உலக அளவில் அடுத்தடுத்த இடங்களில் மோகன்லாலின் ‘எம்புரான்’ (ரூ. 265 கோடி), மஞ்சும்மள் பாய்ஸ் (ரூ.242 கோடி), துடரும் (ரூ.234 கோடி), 2018 (ரூ.177 கோடி) ஆகிய மலையாளத் திரைப்படங்கள் இருக்கின்றன.

Read Entire Article