ARTICLE AD BOX
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போன ரோபோ சங்கர் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துக் கொண்டு வருகிறார். ஆனாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்போது உடல்நிலை குறைவால் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான காரணங்கள் மற்றும் என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.
உடல் ரீதியால் அவஸ்தைப்படும் ரோபோ சங்கர்
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரொம்பவே உடல் மெலிந்து போய் பல பிரச்சனைகளை தாண்டி வந்தார். இதனை அடுத்து ரோபோ சங்கரின் மகள் பாண்டியம்மா செய்த விஷயங்கள் சர்ச்சையாக ஆனது.
இந்நிலையில் தற்போது சென்னையில் படபிடிப்பின் போது ரோபோ சங்கர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததன் மூலம் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால்தான் அவர் மயங்கி விழுந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
robo shankar photoதற்போது துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரோபோ சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு திரும்பி வருகிறார் என்றும் மருத்துவர்கள் கண்காணிப்பில் ரோபோ சங்கர் இருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாயிருக்கிறது.
ரோபோ சங்கருக்கு வந்த நோய்கள்
- கல்லீரல் பிரச்சனை
- மஞ்சள் காமாலை
- உடல் எடை பிரச்சனை
சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் வீட்டில் அனுமதி இல்லாமல் வளர்த்த இரண்டு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டி வனத்துறையினர் அந்த கிளிகளை பூங்காவில் ஒப்படைக்கப்பட்டு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா அவருடைய ஆறு மாத மகனின் மூளை வளர்ச்சி பள்ளி சேர்க்கை குறித்து ஒரு வீடியோவை போட்டு அதன் மூலம் சர்ச்சையில் சிக்கி வந்தார். இதையெல்லாம் கடந்து வந்த ரோபோ சங்கர் தற்போது உடல்நிலை குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

3 months ago
5





English (US) ·