ARTICLE AD BOX

தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்துக்காக பூஜா ஹெக்டே, முதல் முறையாக, தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மே 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

9 months ago
9






English (US) ·