முத்தின கத்திரிக்காயாக மாறிய அப்பாஸ்.. நரைத்த தாடியுடன் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

8 months ago 8
ARTICLE AD BOX

ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸ் அதன் பிறகு பாத்ரூம் கழுவும் மருந்து விளம்பரத்தில் நடித்த போதே அவருடைய மார்க்கெட்டை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

பெரும்பாலும் ஹீரோவாக இல்லாமல் இரண்டாவது கதாநாயகனாக பல படங்களில் நடித்தார் அப்பாஸ். தனி ஒரு ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே பெரிய வெற்றியை பெற்றதாகத் தெரியவில்லை.

இருந்தாலும் அனைத்து இயக்குனர்களின் முதல் சாய்ஸாக அனைத்து படங்களிலும் இருந்தவர் தான் அப்பாஸ். இளம் பெண்களிடையே அப்படி ஒரு க்ரேஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தனி ஒரு ஹீரோவாக தன்னை வளர்த்துக் கொள்ளாமல் இரண்டாம் கட்ட நாயகனாக நடித்து வந்ததால் ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் தற்போது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அப்பாஸ் நரைத்த தாடியுடன் ஹார்லி டேவிட்சன் பைக்குடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

abbas-latest-cinemapettaiabbas-latest-cinemapettai

பெரும்பாலும் நரை தாடி தெரியக்கூடாது என்பதற்காக எப்போதுமே மொழுக்கென்று இருக்கும் அப்பாஸ் சமீபகாலமாக தாடி வளர்த்து வருவது, ஏதாவது ஒரு படத்திற்காக இருக்குமோ? என ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article