ARTICLE AD BOX
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள சாத்துப்பள்ளே-வில் தெலுங்கு மொழி பேசும் தம்பதிக்கு மகளான் கடந்த 1996-ஆம் ஆண்டு பிறந்த நாகல்லா, சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர்!
சிறு வயது முதலே பள்ளியில் முதல் மானவியாக விளங்கிய அனன்யா, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். தனது பட்ட படிப்புக்கு பின் பிரபல தனியார் நிறுவனத்தில் IT ஊழியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
கல்லூரி காலத்தில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அனன்யா, தனது வீட்டில் தெரிவிக்க முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பின், தனது சகோதரன் உதவியுடன் நடிப்பு துறையில் கால் பதிக்க வேண்டியவற்றை கற்றுத் தேர்ந்தார்!
படிப்புக்கு பின் IT ஊழியராக மாறிய அனன்யா, இதனிடையே Shaadi (2017) எனும் குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். பின் இந்த குறும்படமே, வெள்ளிதிரையில் கால் பதிக்க இவருக்கு முகவரியாய் அமைந்தது!
வெள்ளித்திரையில் அனன்யாவின் முதல் திரைப்படம் மல்லேஷம் (2019). இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, SIIMA விருதின் (சிறந்த நடிகைக்கான பிரிவில்) Nominated பட்டியலில் இடம் பிடித்தார்!
மல்லேஷம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொண்டதை உணர்ந்த அனன்யா, சினிமாவிற்காக தன்னை தயார் செய்துக்கொள்ளும் வகையில் நடனம், உடற்பயிற்சி, நீச்சல், நடிப்பு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் இணைந்து தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார்!
சினிமாவிற்கு தன்னை தயார் செய்துக்கொள்ளும் வகையில் உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்திய நிலையிலும், பின் உடற்பயிற்சி மீது கொண்ட ஈர்ப்பால் தொடர்ந்து அதனை செய்ய ஆரம்பித்தார். இதேப்போன்று யோகா, தியானத்திலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
2019-ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் கால் பதித்த அனன்யா, ஆண்டிற்கு குறைந்தது 2 திரைப்படங்கள் என பிஸியான நடிகையாக வளர்ந்து நின்றார். இதில் பல வெற்றி திரைப்படங்களும் அடங்க, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இவர் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
Thanks For Reading!







English (US) ·