ARTICLE AD BOX
கட்டுமஸ்தான உடலை கொண்டிருந்த ரோபோ சங்கர், ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்பாடு ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்
கிராம நிகழ்ச்சிகளில் உடலில் வெள்ளை நிற சாயத்தை பூசிக்கொண்டு ரோபோ மாதிரி நடனமாடி அசத்துவார். இதனாலே அவருக்கு ரோபோ சங்கர் பெயர் கிடைத்தது
மிமிக்ரி ஆர்வம் கொண்ட ரோபோ சங்கருக்கு கலக்க போவது யாரு வரப்பிரசதாமாக அமைந்தது. விஜயகாந்த், எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்றவரை போல் அப்படியே நடிக்க செய்வார்
கோலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் கூட்டத்திலே ஒருவனாகவே இருந்து வந்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு நல்ல ரோல்கள் வர தொடங்கியது
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், மாரி, இரும்புத்திரை, விஸ்வாசம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்
படங்களுக்கு நடுவே டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். அவருக்கான பெயரை வாங்கி தந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்
தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் Pumbaa கதாபாத்திரத்திற்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றினார். இதுதவிர, Moonu Kaalu Vaaganam எனும் பாடலை பாடியுள்ளார்
ரோபோ சங்கர் குடும்பமும் திரை குடும்பம் ஆகும். அவரது மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் நடித்தார். அவரது மனைவி பிரியங்கா Kanni Maadam படத்தில் நடித்துள்ளார்
மஞ்சள் காமாலையால் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வந்த ரோபோ சங்கர், கல்லீரல் செயலிழப்பால் செப் 18,2025 காலமானார்
Thanks For Reading!








English (US) ·