ARTICLE AD BOX
தமிழ் மொழியில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த நடிகை லிஜோமோல், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். 1992-ஆம் ஆண்டு, இடுக்கியில் மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட தம்பதிக்கு மகளாய் பிறந்தார்!
கேரளாவில் பிறந்து வளர்ந்த லிஜோமோல், தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவர். தமிழ், மலையாளம் தவிர்த்து ஆங்கில மொழியிலும் சரளமாக பேசும் திறன் கொண்டவர்!
கேரளாவின் கொச்சியில் இளங்கலை பட்டம் முடித்த லிஜோமோல், பாண்டிச்சேரியில் தனது முதுகலை படிப்பை முடித்தார். லிஜோமோல், சரளமாக தமிழ் பேச இதுவும் ஒரு காரணம் ஆகும்!
பள்ளி, கல்லூரி படிப்புக்கு மத்தியில் லிஜோமோல் நடிப்பையும் முறையாக கற்றார். நடிப்பை முறையாக கற்று மலையாள திரையுலகில் மகேஷிண்டே பிரதிகாரம் (2016) படம் மூலம் அறிமுகமானார்!
லிஜோமோலின் தயார் லிசம்மா கேரள வனத்துறையில் பணியாற்றியவர், தந்தை ராஜீவ் தொழிலதிபர் ஆவார். ஆக, சினிமா பின்னணி ஏதும் இன்றி, லிஜோமோல் தென்னிந்தியா திரைத்துறையில் சாதித்தவர்!
சினிமாவிற்கு முன் கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக லிஜோமோல் பணியாற்றியுள்ளார். திரைத்துறையில் கால்பதிக்க, இந்த பணி லிஜோமோலுக்கு உதவியாக இருந்துள்ளது!
முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்கியது. அதாவது, 2021-ல் அவர் திருமணத்தை முடித்த பின்னரும், நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் பல அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது!
லிஜோமோல் நடித்த பெரும்பான்மை திரைப்படங்களில் அழுகை காட்சி இருக்கும். இந்த அழுகை காட்சிக்காக இவர் ஒரு முறை கூட Glycerine பயன்படுத்தியது கிடையாதாம்!
Thanks For Reading!







English (US) ·