ரசவாதி: அர்ஜுன் தாஸுக்கு `தாதா சாகேப் பால்கே' திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது!

7 months ago 8
ARTICLE AD BOX

ரசவாதி திரைப்படத்துக்காக 15-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

திரைப்படத் துறையினர் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ரொமாண்டிக் - டிராமா திரைப்படம் ரசவாதி. இந்த படத்துக்காக அர்ஜுன் தாஸ் பெறும் 3-வது விருது இதுவாகும்.

ரசவாதி ரசவாதி

இந்த விருது குறித்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சாந்த குமார், "ரசவாதி திரைப்படத்தில் சதாசிவம் பாத்திரத்துக்காக தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2025-ல் பதிவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருந்து ரசவாதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ரசவாதி படத்துக்காக 3-வது விருது பெறும் அர்ஜுன் தாஸுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ரசவாதி படத்தின் ஒலிப் பொறியாளர் தபாஸ் நாயக், 9 உலக திரைப்படங்களைத் தாண்டி சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதைப் பெறுகிறார். மேலும் 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது ரசவாதி திரைப்படம்.

ரசவாதி

ரசவாதி

அர்ஜுன் தாஸ் உடன் தான்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார், இயக்குநர் சாந்த குமார் - தமன் கூட்டணியின் 3-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசவாதி திரைப்படத்துக்கு சரவணன் இளவரசு, சிவக்குமார் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வி ஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது.

Actor Arjundas won the BEST ACTOR Award for his portrayal as “Sadasiva Pandiyan” in the movie “RASAVATHI” selected from 700+ movie entries at the 15th Dada Saheb Phalke Film Festival 2025.
Congratulations @iam_arjundas for Receiving the 3rd award for #Rasavathi @SureshChandraa pic.twitter.com/xTiy0taHSd

— Santhakumar (@Santhakumar_Dir) May 1, 2025
Ajith Kumar: ``நன்றிகடன் பட்டுள்ளேன்'' - அஜித் வெளியிட்ட வீடியோ!
Read Entire Article