``ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்னு விமர்சனம் பண்ணாங்க" - பா. ரஞ்சித்

2 months ago 4
ARTICLE AD BOX

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் 'பைசன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் எனப் படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், "'கபாலி' பட சமயத்தில் 'உனக்கு எல்லாம் ரஜினி வாய்ப்பு கொடுத்தார், ரஜினியை வைத்து நீ எப்படி இந்த டயலாக் பேசலாம்'னு எழுதினாங்க.

BisonBison

அவ்வளவு மோசமாக விமர்சித்த பிறகு எனக்கு என்ன பண்றதுனு தெரியல. 'கபாலி' படத்தோட வெற்றி குறித்து தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரியும். 'கபாலி' ரிலீஸுக்கு முன்னாடியே 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய திரைப்படம்.

விமர்சன ரீதியாக மோசமாக இருந்த படங்களை வசூல் ரீதியாக வெற்றியாகக் கொண்டாடியிருக்காங்க.

ஆனா, 'கபாலி' படத்தை மிக மோசமாக விமர்சித்தாங்க. 'ஒரு நடிகரை நீ எப்படி இப்படி பேச வைக்கலாம். ரஜினிக்குள்ள நீ எப்படி ஜாதியைக் கொண்டு வரலாம்'னு எழுதினாங்க.

அதை உண்மையாகவே எப்படி கையாளணும்னு எனக்குத் தெரியல. 'கபாலி' வெற்றிப் படம், தோல்விப் படம் என்பதல்ல என்னுடைய பிரச்னை. இத்தனை ஆண்டுகள் என்னை இழிவாக விமர்சித்த சினிமா குறித்து ஏன் அவர்கள் கேள்வி எழுப்பல.

என்னுடைய வாழ்க்கையை வணிக ரீதியாக வெற்றிப் படத்தில் நான் கொடுத்தேன். அந்தப் படத்தோட திரையாக்கம் குறைபாடுகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

Pa RanjithPa Ranjith

மற்றபடி சூப்பர் ஸ்டார் நடிச்ச மற்ற எல்லா படங்களும் உங்களுக்கு சூப்பரானு தெரியல. நான் 'கபாலி' படத்தை நல்லா இயக்கினேன்னு அவர் நம்பினார். அது மிகப்பெரிய வெற்றிப் படம்னு நம்பி எனக்கு 'காலா' படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.

'கபாலி' படத்தை இவ்வளவு மோசமா விமர்சித்த பிறகு நான் ஒரு கமர்ஷியல் படம் கொடுத்திருக்கலாம். ஆனா, சூப்பர் ஸ்டாரை வைத்து நிலமற்ற மக்களுக்கு நில உரிமை கோருதல் குறித்தான விஷயத்தைப் பேசினேன்." என்றார்

Read Entire Article