"ராம் சார் சொன்ன படம் இது; 'A' சர்டிபிகேட் கிடைக்கும்னு நினைச்சேன்" - கார்த்திக் சுப்புராஜ்

9 months ago 9
ARTICLE AD BOX

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'பெருசு' படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. படம் குறித்துப் பேசியிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் ,

"நானும், ராம் சாரும் அடிக்கடி பேசிப்போம். அப்படி பேசும்போது எதாவது இன்ட்ரஸ்ட்டிங்கான படம் வந்தா சொல்லுவாரு. அப்படி அவர் சொன்ன ஒரு படம் தான் 'கூழாங்கல்'. அந்தப் படத்தை ஸ்டோன் பென்ச் பண்ணலாம்னு நானும், கார்த்திக்கும் பேசுனோம். ஆனா, விக்னேஷ் சிவன் ரிலீஸ் பண்ணாங்க.

ராம் சார் அந்த மாதிரி ஒரு நாள் கால் பண்ணும்போது, 'இளங்கோ ராம்னு ஒருத்தர் படம் பண்ணிருக்காரு. நல்லா இருக்கு. நிறைய ஃபெஸ்டிவல்ல அவார்ட் வாங்கியிருக்கு. பாருங்க...'ன்னு சொன்னாரு. அப்போ இந்தப் படம் பேரு 'Bent in a Coffin'. ஃபெஸ்டிவல்லாம் போயிருக்குன்னு சொன்னதுமே நான் இது 'Children of Heaven' மாதிரி பயங்கரமான படம்னு நினைச்சேன். ஆனா, ஃப்ரஸ்ட் ஃபிரேம்ல இருந்தே ஷாக்கிங். இந்தப் படம் நல்லா எழுதப்பட்ட, நல்லா இயக்கப்பட்ட ஹியூமர் படம். இதுதான் இருக்கறதுலேயே கஷ்டம். சினிமால இருக்க ஜானர்லேயே கஷ்டமான ஒண்ணு ஹியூமர் தான். எழுதும்போது நமக்கு சிரிப்பு வரலாம்... நடிக்கும்போது அவங்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனா, ஆடியன்ஸ்க்கு சிரிப்பு வராது. இது ரொம்ப பெரிய சேலன்ச்.

சுந்தர்.சி - குஷ்பூ செலுத்திய நேர்த்திக்கடன்; குடும்பத்துடன் தரிசனம்; அன்னதானம் வழங்கி வழிபாடு
'பெருசு'

படம் பாத்துட்டு இளங்கோ ராம்கிட்ட கேக்கும்போது, 'இது தமிழ்ல ரீமேக் பண்ணனும்னு சொன்னாரு. தமிழ்ல எடுக்கும்போது செம்மையான எழுத்தாளரை பிடிச்சு பண்ணனும். யார் நடிக்கறாங்ன்கனு பாக்கணும்னு சொன்னேன். படம் பாக்கும்போது பாலாஜி நல்லா பண்ணியிருக்காரு. கிரேசி மோகன் சாருக்கு நம்ம எல்லாரும் எப்படி பெரிய ஃபேனோ... அப்படி பாலாஜியும் நல்லா பண்ணியிருக்காரு. மைக்கேல் மதன காமராஜன்ல கிளைமேக்ஸ்கிட்ட போக போக பெரிய குழப்பம் நடக்கும். அதுல காமெடி இருக்கும். அந்த மாதிரி பாலாஜியும் இந்தப் படத்துல பண்ணியிருக்காரு.

இந்தப் படம் அண்ணன், தம்பி பத்தின படம். தம்பி பயங்கரமான குடிகாரன், ஜாலியான கேரக்டர். அண்ணா சீரியஸான மெச்சூர்டான கேரக்டர். இந்தக் கேரக்டர்களை பண்ண ஓப்பன் மைண்ட் வேணும். அப்போ வைபவ்வும், அவங்க அண்ணனும் பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, வைபவ் அப்பாவே பெரிய டைரக்டர். அதனால, அவர் எதுவும் சொல்லிடாத மாதிரி பண்ணனும்னு நினைச்சேன்.

படம் எடுக்க ஆரம்பிச்சதும், நான் ரெட்ரோ பட ஷூட்டிங்க்குப் போயிட்டேன். சமீபத்துல ரப் கட் பாத்தோம். இந்தப் படத்தை எடுத்து தமிழ்ல தயாரிச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படறேன். இது மெச்சூர்டான அடல்ட் கன்டென்ட். 18 வயசுக்கு மேல இருக்க யாரும், இந்தப் படத்தை குடும்பத்தோட உக்காந்து பாக்கலாம். இந்தப் படத்துல காமெடியோடு எமோஷனல் இருக்கும். `கார்த்திக் இந்தப் படத்துக்கு யு/ஏ கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க'. ஆனா, நான் இந்தப் படத்துக்கு 'ஏ' தான் கொடுக்கணும்னு சொன்னேன்" என்று பேசினார்.

Read Entire Article