ARTICLE AD BOX
16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'The Investiture of the Gods' எனும் நாவலை மையமாக கொண்டு நே ஜா 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிராகன் அரசர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தில், இளம் வீரன் ஒருவன், எதிரிகளிடம் இருந்து தனது மக்களை எப்படி பாதுகாக்கிறார் என்பது படத்துடைய கதையாகும்
2019ல் வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 2ம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
கிட்டத்தட்ட 17,800 ஆயிரம் கோடிகளை குவித்துள்ள நே ஜா 2 திரைப்படம், வெறும் 80 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 29 2025 அன்று சீனா புத்தாண்டின் முதல் நாளில் நே ஜா 2 திரைப்படம் தியேட்டரில் வெளியானது. முதல் 10 நாட்களில் வசூலை வாரி குவிக்க தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஹாங் காங் போன்ற நாடுகளில் திரையிடப்பட்டது
சீனாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியிருப்பது சீன மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் மற்றும் சீனாவின் பழங்கால இசை கருவியான suona-ன் இசையும் மக்களை ஈர்க்க செய்தது.
நே ஜா 2 இயக்குனர் Jiaozi-க்கு அனிமேஷன் துறையில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அவர் நே ஜா படத்தை வடிவமைக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். 2015ல் படத்திற்கு நிதி கிடைத்திட, சிறப்பாக செயல்பட்டு 2019ல் படத்தை வெளியிட்டார்
உலகளவில் 2 பில்லியன் டாலரை தாண்டிய முதல் ஹாலிவுட் அல்லாத படமாக நே ஜா 2 திகழ்கிறது. அனிமேஷன் படங்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே ஜானரில் பல்வேறு படங்களை உருவாக்க சீன சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Thanks For Reading!







English (US) ·