ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி' தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

8 months ago 8
ARTICLE AD BOX

அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், ’குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article