ARTICLE AD BOX
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு முதலில் ராம் சரணை தான் அணுகியுள்ளனர். அவர் மகதீரா படம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், பட வாய்ப்பை நிராகரிக்க செய்துள்ளார்
ராம் சரணை தொடர்ந்து சூர்யாவுக்கு வாரணம் ஆயிரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் சூர்யாவின் சினிமா கேரியருக்கு திருப்பு முனையாகவும் அமைந்தது. 2008ம் ஆண்டிலே உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்தது
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் கதை ராம் சரணுக்கு பிடித்தப்போதும், பிற படங்களின் ஷூட்டிங் பிஸியால் ரிஜெக்ட் செய்துள்ளார். பிறகு, ஓ காதல் கண்மணி துல்கர் சல்மான் கை வசம் சென்றது
ராணா டகுபதி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த Leader திரைப்படம் முதலில் ராம் சரணுக்கு தான் சென்றுள்ளது. சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அப்படத்தை ரிஜெக்ட் செய்துள்ளார்.
2010ல் பிரபாஸ், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான டார்லிங் திரைப்படம், கமர்ஷியல் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் ராம் சரண் தவறவிட்டுள்ளார்
ஸ்ரீமந்துடு திரைப்படத்தில் லீட் ரோலில் நடிப்பதற்கு ராம் சரண் உட்பட பல்வேறு நடிகர்களை அணுகியுள்ளனர். அனைவரும் சில காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்திட, மகேஷ் பாபுவை படக்குழுவினர் தேர்வு செய்தனர்
சூப்பரான கதைக்களத்தை கொண்ட ஸ்ரீமந்துடு திரைப்படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.97 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல், உலகளவில் ரூ.143 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது
தமிழில் சூப்பர் ஹிட் அடித்த நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ராம் சரணை மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனன் அணுகியுள்ளார். ஆனால், இதே மாதிரி வேறு கதையில் நடித்திருப்பதன் காரணமாக ராம் சரண் நோ சொல்லியுள்ளார். பிறகு, நேச்சுரல் ஸ்டார் நானியை தேர்வு செய்துள்ளனர்
Thanks For Reading!







English (US) ·