ARTICLE AD BOX
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1. 250 கோடி ரூபாயில் உருவான இத்திரைப்படம் 500 கோடி வரையில் வசூல் செய்தது!
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு வெளியானது. 250 கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 350 கோடி வரையில் வசூல் செய்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்க கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ. 110 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 239 கோடி வரையில் வசூல் செய்தது.
நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்க கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவு திரைப்படம் இருமுகன். 45 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 94 கோடி வரை வசூல் செய்தது!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம், சதா நடக்க கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான மாஸ் ஹிட் திரைப்படம் அந்நியன். 26 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 82 கோடி ரூபாய் வசூல் செய்தது!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி உள்ளிட்டோர் நடிக்க கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கலான். 100 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவான இத்திரைப்படம் 72 கோடி வசூல் செய்தது.
நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்க கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படம் கோப்ரா. 90கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 67 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் கந்தசாமி. 35 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 52 கோடி வரை வசூல் செய்தது!
Thanks For Reading!







English (US) ·