ARTICLE AD BOX

‘ஃபேமலி மேன்’ ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய வெப் தொடர், ‘ஃபார்ஸி’. இதில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உள்பட பலர் நடித்தனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
8 எபிசோடுகளை கொண்ட இதில், விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாகவும், ஷாகித் கபூர் கள்ள நோட்டு அடிப்பவராகவும் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த சீசன் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதில் ஷாகித் கபூரும் விஜய் சேதுபதியும் மீண்டும் இணைகின்றனர். இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்க ஷாகித் கபூருக்கு ரூ.40 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

2 months ago
4






English (US) ·