ARTICLE AD BOX
Vadivelu: எந்த ஒரு மீம் டெம்ப்ளேட் எடுத்தாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தக்கூடியவர் வடிவேலு ஒருவர் மட்டும்தான். நகைச்சுவையில் பின்னி பெடல் எடுக்கக்கூடிய இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பிறகு கம்பேக் கொடுத்த நிலையில் மாமன்னன் படம் வடிவேலுவை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது. அதுவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த சூழலில் தலைநகரம் படத்திற்கு பிறகு மீண்டும் கேங்கர்ஸ் படத்தின் மூலம் இணைந்துள்ளது சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி. இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பல கெட்டப்புகளில் அசத்தும் வடிவேலு
vadivelu-gangersஅதில் பணத்தை திருடுவதற்காக சுந்தர்சியுடன் வடிவேலுக்கு கூட்டணி போட்டுள்ள நிலையில் பல கெட்டப்புகளில் அசத்தியுள்ளார். இதை பார்க்கும் போது விண்டேஜ் வடிவேலு கம்பேக் கொடுத்தது போல் இருக்கிறது.
கேங்கர்ஸ் படத்தில் இளமையான தோற்றம், வயதான தோற்றம் மற்றும் பாட்டி தோற்றம் என்ன பல கெட்டப்புகளில் அசத்தி இருக்கிறார். படம் பக்கா காமெடி என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
வடிவேலுக்கு இந்த படம் மீண்டும் தமிழ் சினிமாவில் பெயர் கொடுக்கும் படமாக அமைய இருக்கிறது. கேங்கர்ஸ் வெளியான அதிலிருந்து படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

8 months ago
8





English (US) ·