விளையாட்டுப் போட்டியும் ஆண்டு விழாவும்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 2

2 months ago 4
ARTICLE AD BOX

பள்ளிப் பருவத்தில் நான் கொஞ்சம் விளையாட்டுத்தன மானவன் என்றாலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவன். பல போட்டிகளில் விரும்பி பங்கேற்பேன். அப்போது அங்கு, த்ரீ லெக்ட் ரேஸ் நடக்கும். அதாவது மூன்று கால் ஓட்டப்பந்தயம். இரண்டு பேர் பங்கேற்கும் போட்டி இது. ஒரு நண்பனின் ஒரு காலை, மற்றொரு நண்பனின் ஒரு காலுடன் கட்டி விடுவார்கள். அதோடு ஓட வேண்டும். இது எனக்குப் பிடித்த விளையாட்டு.

பிறகு, சாக்கு ரேஸ். கோணிப்பைக்குள் காலை விட்டுக் கொண்டு தாவித் தாவி ஓட வேண்டும். பிறகு ஐம்பது மீட்டர், நூறு மீட்டர் ஓட்டப்பந்தயங்களும் நடக்கும். இதில் எங்களை, பச்சை ஹவுஸ், மஞ்சள் ஹவுஸ், சிவப்பு ஹவுஸ், நீல ஹவுஸ் என்று அணி அணியாக உடற்பயிற்சி ஆசிரியர் பிரித்து விடுவார் . கீவளூர் டி.எஸ்.செல்வராஜ், பழனிவேல், பி.வி.தினகரன், டிஜி ராமலிங்கம், மோகன்தாஸ், ராஜா, சண்முகம் உள்பட எங்கள் நண்பர்கள் டீம் பெரிதாக இருந்தது.

Read Entire Article