ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில், மாரி நாயகனாகவும் அபர்ணா, விமலா நாயகிகளாகவும் நடித்துள்ள படம், ‘தாரணி’. மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரித்துள்ள இதில், ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காயத்ரி குருநாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெங்கடேஷ் மாவேரிக்’ ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ஆனந்த் பேசும்போது, “புதியவர்களை வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். நான்கு மாதம் முன்பு வரை நான் இப்படி ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது என் வீட்டுக்கே தெரியாது. ஆபீஸ் போவதாகப் பொய் சொல்லி விட்டு திரைப்படத்துக்காகச் சுற்றினேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்த விஷயமே வீட்டுக்குத் தெரியவந்தது.

1 month ago
3






English (US) ·