வீர தீர சூரன்: "க்ளைமேக்ஸில் மதுர வீரன் தானே பாடலைச் சேர்த்ததுக்கான காரணம்...'' - இயக்குநர் அருண்

8 months ago 8
ARTICLE AD BOX

வீர தீர சூரன்

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது `வீர தீர சூரன்'.

இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஜி.வி இசையில் படத்தின் பல காட்சிகளும் தியேட்டர் மெட்டிரியலாக அமைந்திருந்தன.

Director SU ArunkumarDirector SU Arunkumar

மதுர வீரன் தானே

அப்படி அந்த இசையைத் தொடர்ந்து வரும் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தையும் மக்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

இதையெல்லாம் தாண்டி வித்யாசாகர் இசையில் உருவான தூள் திரைப்படத்தின் `மதுர வீரன் தானே' பாடலை க்ளைமேக்ஸில் இணைத்திருந்தது பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் டிரீட்டாக அமைந்தது.

கதையை எழுதும்போதே...

விகடனுக்கு அளித்த நேர்காணலில் இந்தப் பாடலைப் படத்தில் சேர்த்தது குறித்துக் கூறியிருக்கும் எஸ்.யூ. அருண்குமார், ``அந்தப் பாடலை வைக்க வேண்டும் எனக் கதையை எழுதும்போதே முடிவு செய்துவிட்டோம். படம் முழுவதும் திருவிழாவிலிருந்து பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அது போலவே இந்தப் பாடலையும் ரேடியோ குழாயிலிருந்து ஒலிக்க வைக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம்.

வீர தீர சூரன் பாகம் 2வீர தீர சூரன் பாகம் 2
வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?

போஸ்ட் புரோடக்‌ஷன்

ஆனால் , இந்தக் காட்சிக்கு முந்தைய காட்சியில் பாடல்கள் ஒலிப்பது சூழலுக்குச் சரியாகப் பொருந்தவில்லை. அதன் காரணமாகத்தான் அந்த இடத்தில் சுதந்திரம் எடுத்துக் கொண்டு பாடலை அங்குச் சேர்த்தோம்.

படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் நேரத்தில்தான் இந்த முடிவை மாற்றி தனியாகப் பாடலை இணைத்தோம்" எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article