ARTICLE AD BOX
அண்மையில் வெளியான இந்த வீர தீர சூரன் திரைப்படம் உண்மையில் 2-வது பாகம் ஆகும். அதாவது, முதல் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, ஒரு சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது 2-ஆம் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது!
வீர தீர சூரன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான Pre-Production பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு - கைவிடப்பட்ட நிலையில், விரைவில் இத்திரைப்படத்திற்கான பணிகள் மீண்டும் துவங்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் அருண் குமாருடன் முதன் முறையாக இணையும் நடிகர் விக்ரமுக்கு, வீர தீர சூரன் திரைப்படம் ஆனது 62-வது திரைப்படம் ஆகும். அதாவது, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்க, நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 62-வது திரைப்படம் இதுவாகும்!
பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, இத்திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் முதன் முறையாக அறிமுகமாகிறார். இயக்குனரின் முந்தைய படங்களான சித்தா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களால் ஈர்க்கப்பட்ட சுராஜ், இத்திரைப்படத்தின் கதையை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் சுராஜ் மட்டும் அல்ல, பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி, தெலுங்கு நடிகர் பாலிரெட்டி ப்ருத்வீராஜ், கன்னட நடிகர் ரமேஷ் இந்திரா மற்றும் பல வேற்று மொழி நடிகர்கள் என இத்தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
58 வயது எட்டிய நடிகர் விக்ரமுக்கு, புதியதொரு திரை ஜோடியை அறிமுகம் செய்ய விரும்பிய இயக்குனர் அருண், விக்ரமை விட 31 வயது குறைவான இளம் நடிகை துஷாரா விஜயனை, நாயகியாக நடிக்க வைத்தார். இவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம், கடும் விமர்சனங்களை சந்திதத்து குறிப்பிடத்தக்கது!
வீர தீர சூரன் மூலம் இயக்குனர் அருணுடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் GV பிரகாஷ். அதேநேரம், நடிகர் விக்ரமுடன் தெய்வ திருமகள் (2011), தாண்டவம் (2012), தங்கலான் (2024) திரைப்படங்களுக்கு பின் 4-வது முறையாக இணைகிறார்!
திரைப்படத்தின் 2-ஆம் பாதியில் இடம்பெறும் 18 நிமிட காட்சி ஒன்று, Single take-ல் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த 18 நிமிட காட்சியானது கிட்டத்தட்ட ஒரு நாள் இரவு முழுவதும் படமாக்கப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thanks For Reading!







English (US) ·