`வெடிக்கும் பைசன்; துருவ்-ன் மறக்க முடியாத நடிப்பு' - பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன்

2 months ago 4
ARTICLE AD BOX

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.

அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது 'பைசன்'.

பைசன் காளமாடன்பைசன் காளமாடன்
Bison: "ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம்" - பைசன் குறித்து மாரி செல்வராஜ்

சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

அவ்வகையில் இயக்குநர் வெற்றிமாறன், "உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபலிக்கும் ஆழமான தியானம்.

த்ருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது. வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

பைசனை பார்த்து கொண்டாடிய எங்கள் மரியாதைக்குரிய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் பிரியமும் ❤️#Bison pic.twitter.com/92SSHwox7l

— Mari Selvaraj (@mari_selvaraj) October 24, 2025
"உச்சத்துக்குப் போகனும்" - மாரி செல்வராஜின் 'பைசன்' பட ட்ரெய்லர்

அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன." என்று பாராட்டியிருக்கிரார் வெற்றிமாறன்.

Read Entire Article