வெறும் 10 நாட்கள்.. குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட பாலிவுட் படங்கள்!

9 months ago 9
ARTICLE AD BOX
சில பாலிவுட் படங்களின் ஷூட்டிங் முடிவடைய ஓராண்டு ஆகும் நிலையில், சரியான திட்டமிடல் இருந்தால் ஒரு மாதத்தில் கூட படத்தை முடித்துவிடலாம் என்பதை ஏராளமான இயக்குனர்கள் நிரூபித்துள்ளனர். அந்த படங்களின் லிஸ்ட்டை இங்கு பார்க்கலாம்
Image 1
கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவான தமக்கா படத்தின் ஷூட்டிங் வெறும் 10 நாட்களில் முடிவடைந்து சாதனை படைத்தது. பெரும்பாலான காட்சிகளை மும்பையில் உள்ள ஹோட்டலில் எடுத்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக மொத்தம குழுவினரும் ஹோட்டலில் தான் தங்கியிருந்தனர்
Image 2
நவாசுதீன் சித்திக் மற்றும் ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவான ஹராம்கோர் படத்தின் ஷூட்டிங் வெறும் 16 நாட்களில் நிறைவடைந்தது. இதில் வரக்கூடிய ஆசிரியர் - மாணவி இடையிலான காதல் கதை, ரசிகர்களை கவர செய்தது
Image 3
மாதவன், கங்கனா ரனாவத் நடித்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தின் ஷூட்டிங் ஒரே மாதத்தில் நிறைவடைந்தது. இதில் கங்கனா இரட்டை வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
Image 4
அக்சய் குமார், ஹுமா குரேஷி நடித்த ஜாலி எல்எல்பி 2 திரைப்படத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிஜ லொகேஷனில் படப்பிடிப்பை நடித்தியதால் வெறும் 30 நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் இயக்குனர் சுபாஷ் கபூர் முடித்துவிட்டார்
Image 5
காமெடி - ஆக்சன் ஜானரில் உருவான அக்சய் குமாரின் ஹவுஸ்புல் 3 படத்தின் ஷூட்டிங் வெறும் 38 நாட்களில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு அக்சன் குமார் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களும் கிடைத்தது
Image 6
சாரா அலி கான், விக்ராந்த் மாஸ்ஸி நடித்த கேஸ்லைட் படத்தின் ஷூட்டிங் 36 நாட்களில் நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் குஜராத்தின் Wankaner மாளிகை மற்றும் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. அண்டர்வாட்டர் காட்சிகளை Khopoli-ல் படம்பிடித்தனர்
Image 7
ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடிப்பில் உருவான காபில் திரைப்படத்தின் ஷூட்டிங் 77 நாட்களில் நிறைவடைந்துள்ளது. சரியான திட்டமிடல் காரணமாக 11 நாட்கள் முன்க்கூட்டியே முடிவடைந்துள்ளது
Image 8
அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடித்த 'ki & ka' படத்தின் ஷூட்டிங் 45 நாட்களில் முடிந்துள்ளது. குறிப்பாக, YRF ஸ்டுடியோவில் அர்ஜூன் கபூரின் காட்சிகள் 22 மணி நேரம் தொடர்ச்சியாக படம்பிடிக்கப்பட்டது. அவர் கிட்டத்தட்ட 23 ஆடைகளை மாற்றி, சமையல் காட்சிகளை முடித்து கொடுத்தார்
Image 9
Thanks For Reading!
Read Entire Article