ஷேன் நிகாமின் ‘ஹால்’ பட சர்ச்சை: அக்.25-ல் படத்தைப் பார்க்கிறார் நீதிபதி

2 months ago 4
ARTICLE AD BOX

ஷேன் நிகாம், சாக் ஷி வைத்யா நடித்​துள்ள மலை​யாளப் படம், ‘ஹால்’. இதை அறி​முக இயக்​குநர் வீரா இயக்​கி​யுள்​ளார். இஸ்​லாமிய இளைஞனுக்​கும் கிறிஸ்தவ பெண்​ணுக்​கு​மான காதலைச் சொல்​லும் படம் இது. மலை​யாளம், தமிழ், இந்​தி, தெலுங்​கு, கன்​னடம் மொழிகளில் செப்​.12-ல் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், படத்​தில் இடம்​பெறும் மட்​டிறைச்சி பிரி​யாணி காட்சி மற்​றும் 15 வசனக் காட்​சிகளை நீக்க வேண்​டும் என்று தணிக்கை வாரி​யம் கூறியது. படக்​குழு மறுப்பு தெரி​வித்​த​தால் சான்​றிதழ் வழங்​கப்​பட​வில்​லை. அதை எதிர்த்​து, ‘ஹால்’ படக்​குழு கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடுத்​தது. அதோடு, ‘ஹால்’ திரைப்​படத்தை நீதி​மன்​றமோ அல்​லது அவர்​கள் நியமிக்​கும் பிர​தி​நி​தியோ பார்க்க வேண்​டும் என்று கோரிக்​கை​யும் வைக்​கப்​பட்​டது.

Read Entire Article