ARTICLE AD BOX

ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள மலையாளப் படம், ‘ஹால்’. இதை அறிமுக இயக்குநர் வீரா இயக்கியுள்ளார். சாக்ஷி வைத்யா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் செப்.12-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தில் இடம்பெறும் மட்டிறைச்சி பிரியாணி காட்சி மற்றும் 15 வசனக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் கூறியது. படக்குழு மறுப்பு தெரிவித்ததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, ‘ஹால்’ படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதோடு, ‘ஹால்’ திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.

2 months ago
4






English (US) ·