ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் அஜித் ரசிகர்களுக்கு, அஜித் என்பவர் மட்டுமின்றி அவரது படங்களில் இடம்பெறும் மற்ற கலைஞர்களும் முக்கியமானவர்களாக மாறி விடுகிறார்கள். 2014-ல் வெளியாகி பெரிய வெற்றியைக் கடந்து, திரையுலகில் ஒரு மாபெரும் தாக்கம் உருவாக்கிய “வீரம்” படத்தில், அஜித்தின் வாழ்க்கைபோன்ற கதாபாத்திரத்தில் சிறு குழந்தையாக நடித்த யுவினா, இன்று தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறியப்படுகிறார். தற்போது ரைட் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
வீரம் படத்தை தொடர்ந்து நடித்த படங்கள்
இதனைத் தொடர்ந்து அரண்மனை, கத்தி, காக்கிச்சட்டை போன்ற படங்களிலும் யுவினா நடித்திருக்கிறார். தற்போது வளர்ந்து விட்டதால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்லும் வகையில் முதல் படத்திலேயே ஹீரோயினாக கமிட் ஆகி விட்டார். இப்படத்தை சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கி RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
அஜித் சாருடன் நடிக்க வாய்ப்பு இருக்கா?
இப்படம் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தில் நடித்த மொத்த டீமும் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள். அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி என்னவென்றால் மீனா, ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு அதன் பிறகு ஹீரோனாக நடித்தது போல் அஜித் சாருடன் நீங்கள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீங்களா அல்லது வேண்டாம் என்று சொல்வீர்களா என கேட்டிருக்கிறார்கள்.
ajith veeram yuvina photoயுவினாவின் பதில்
அதற்கு யுவினா, காலம் ரொம்பவே மாறிவிட்டது, நீங்க சொல்றதெல்லாம் அந்த கலம். இந்த கேரக்டருக்கு அவங்க ஏற்ற மாதிரி இருந்தால் பண்ணி இருப்பாங்க. இப்பொழுது அதை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இது சரியானதாகவும் இல்லை. இந்த காலகட்டத்திற்கு இது சரியான முடிவு இல்லை என்று அவருடைய பதிலை கொடுத்திருக்கிறார்.
ஆனால் அஜித் பொருத்தவரை இப்ப இருக்க ஹீரோயின்களையும் சரி புதுசாக அறிமுக ஆகிற நடிகைகளுடன் நடிப்பதை விட அவருடைய வயசுக்கு ஏற்ற நடிகையை தேர்வு செய்து ஜோடி போட்டு நடிப்பது தான் அஜித் விரும்பி வருகிறார். அதனால் இதற்கு வாய்ப்பே இருக்காது.
யுவினாவின் எதிர்கால சினிமா வாழ்க்கை
“வீரம்” படத்தில் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், அது யுவினாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அறிமுகம் அளித்தது. “ரைட்” படத்தில் ஹீரோயினாக நடித்ததால் இனி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 months ago
5





English (US) ·