ARTICLE AD BOX
ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் தர்ஷன்.
சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன்தான் தர்ஷன். ராம்குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் சில படங்களில் நடித்திருக்கிறார்.
Lenin Pandiyanஅதுமட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது தர்ஷன் ராம்குமாரும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
தர்ஷனுக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் திருமணம் நடைபெற்றிருந்தது.
இந்த 'லெனின் பாண்டியன்' படத்தை அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் தர்ஷனுடன் கங்கை அமரனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தின் மூலம் நடிப்பின் பக்கம் வருகிறார் கங்கை அமரன். இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜாவும் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
Rajini with Dharshan Ganesanஅரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வந்த ரோஜா கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.
நடிகராக அறிமுகமாகும் தர்ஷன் கணேசன், அவரின் தந்தை ராம்குமார், தயாரிப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் ஆகியோருடன் சென்று ரஜினியிடம் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறார்.

1 month ago
2







English (US) ·